`எங்கள் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்'- மணல் குவாரிக்கு எதிராகத் திரண்ட கிராமம் | Cuddalore: People staged protest against sand quarry

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (31/05/2018)

`எங்கள் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்'- மணல் குவாரிக்கு எதிராகத் திரண்ட கிராமம்

விஸ்வநாதபுரம் கிராமத்தில் நிலத்தடிநீரைச் சேமிக்க தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று விஸ்வநாதபுரம் மற்றும் அருகில் உள்ள கலிஞ்சிக்குப்பம், திருகண்டேஸ்வரம் கிராமமக்கள் பொக்கலைன் இயந்திரம் மற்றும் மாட்டு வண்டிகளை சிறை பிடித்து சுமார் 4 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்/

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் விஸ்வநாதபுரம் கிராமத்தில் லாரி மணல் குவாரி செயல்பட்டுவருகிறது. இந்தக் 
குவாரியை மூடக்கோரி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே கிராமத்தில்
மீண்டும் மாட்டு வண்டிகளுக்கான மணல் அமைக்க இன்று சுமார் 100 மாட்டு வண்டிகளுடன் வந்தனர்.

மணல் குவாரிக்கு எதிராக திரண்ட கிராமம்

தகவல் அறிந்த கிராமமக்கள் விஸ்வநாதபுரம் பகுதியில் விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் அனைவரும் 
விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயமும், குடிநீர்த் 
தட்டுப்பாடும் ஏற்படும். வருங்காலச் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்காமல் அல்லல்படும் நிலை ஏற்படும். நீராதாரம் கடுமையாகப் 
பாதிக்கப்படும். எனவே, விஸ்வநாதபுரம் பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விஸ்வநாதபுரம் கிராமத்தில் நிலத்தடிநீரைச் சேமிக்க தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வநாதபுரம் மற்றும் அருகில் உள்ள கலிஞ்சிக்குப்பம், திருகண்டேஸ்வரம் கிராமமக்கள் பொக்கலைன் இயந்திரம் மற்றும் மாட்டு வண்டிகளை சிறைப்பிடித்து சுமார் 4 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்போதைக்கு மணல் குவாரி அமைக்கவில்லை'' என்று கூறினர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றதோடு, மீண்டும் இங்கு மணல் குவாரி அமைத்தால் சுற்றியுள்ள  50 கிராமங்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என எச்சரித்தனர்.