ரியல் மாட்ரிட் மேனேஜர் பதவியிலிருந்து ஜிடேன் விலகல்!

2020 வரை மேனேஜர் பதவியில் இருப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறிய ஜிடேன் இப்போது பதவி விலகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ரியல் மாட்ரிட் மேனஜர் பதவியிலிருந்து விலகியுள்ளார் ஜினாடேன் ஜிடேன். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ரியல் மாட்ரிட் வீரரான இவர், ரியல் மாட்ரிட் அணியின் சிறப்பு ஆலோசகராகச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, 2016-ம் ஆண்டு மேனேஜர் பதவியைப் பெற்றார். முதல் ஆண்டிலேயே ரியல் மாட்ரிட் லா லிகா தொடரில் பார்சிலோனாவைவிட 1 புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதே ஆண்டு, அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. 

ஜிடேன்

ஜிடேன் மேனேஜராக இருந்த இந்த மூன்று ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் கிளப், லா லிகா, 3 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம், இரண்டு கிளப் வேர்ல்ட் கப், இரண்டு முறை UEFA சூப்பர் கப், ஸ்பானிஷ் சூப்பர் கப் பட்டங்களை வென்றுள்ளது. இதில், தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் வென்றது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை.

சமீபத்தில் உக்ரைனில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 13 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட். பட்டம் வென்று வெறும் 5 நாள்களே ஆன நிலையில் ஜிடேன் பதவி விலகியிருப்பது மாட்ரிடின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அடுத்து யார் மேனேஜராக வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரியல் மேட்ரிட்/real madrid

கடந்த ஜனவரி மாதம்தான், 2020 வரை மேனேஜர் பதவியில் இருப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறினார் ஜிடேன். திடீரென இப்போது அவர் பதவி விலகியிருப்பது கால்பந்து உலகில் கேள்விகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!