வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (31/05/2018)

கடைசி தொடர்பு:20:00 (31/05/2018)

`ஸ்டாலின் சட்டசபையைப் புறக்கணித்தது இதனால்தான்!’ - புது சந்தேகம் கிளப்பும் பொன்.ராதாகிருஷ்ணன்

சட்டசபையில் ஆளும் கட்சிக்கு எதிராக தெளிவாக விவாதிக்க வேண்டிய எதிர்க்கட்சி தனது பொறுப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டசபையை புறக்கணித்திருக்கின்றார்களோ என்று மிகப்பெரிய சந்தேகம் கிளப்பியிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ட்டசபையில் ஆளும் கட்சிக்கு எதிராகத் தெளிவாக விவாதிக்க வேண்டிய எதிர்க்கட்சி, தனது பொறுப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டசபையை புறக்கணித்திருக்கின்றார்களோ என்று மிகப்பெரிய சந்தேகம் கிளப்பியிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பொன்.ராதாகிருஷ்ணன்

இதுதொடர்பாக மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த இரண்டு நாள்களாக தமிழக சட்டசபையில் நடந்துவரும் கேலிக்கூத்தை பார்க்கும்போது, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இழந்து நிற்கின்றது. தமிழக சட்டசபையில் மிக முக்கியமான பிரச்சனை குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தவேளையில் அந்த பிரச்னைகள் குறித்து சட்டசபையில் ஆளும் கட்சிக்கு எதிராக தெளிவாக விவாதிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் பொறுப்பு. ஆனால் எதிர்கட்சி தனது பொறுப்பில் இருந்து விலகி, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டசபையை புறக்கணித்திருக்கின்றார்களோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளும் தவறிழைத்தில் சம அளவு பங்கு கொண்டுள்ளன. இந்த காரணத்தினால் சட்டசபை விவாதங்கள் மூலமாக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்கள் மனதில் மேலோங்கி நிற்கின்றது. அதற்கு இந்த மூன்று கட்சிகளும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க