வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (31/05/2018)

கடைசி தொடர்பு:21:29 (31/05/2018)

மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்..! பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட ரஜினிகாந்த்

பத்திரிகை அன்பர்களின் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினி

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை, தூத்துக்குடிக்குச் சென்று நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அளித்தார். அதன்பிறகு சென்னைத் திரும்பிய அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் மிகவும் ஆவேசத்துடன் கோபமாகப் பேசினார். மேலும், செய்தியாளர்களை ஒருமையில் பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ரஜினிகாந்தின் பேச்சுக்குப் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், 'விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாகச் சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்தப் பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.