'புதிய வகுப்பு, புதிய சீருடை, புதிய பாடத்திட்டங்கள்' - கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, இன்று தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதியுடன் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு, ஜீன் 1-ம் தேதியே அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. 

இந்த ஆண்டு முதல் 9,10 மற்றும் 11,12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது, அதேபோல, 1,6, 9 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடப் புத்தகத்தில், தற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனையாளர்கள்  மற்றும் பல புதிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முதல் அனைத்து மாணவர்களும் சீருடையில்தான் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டுக்கான புதிய இலவச சீருடைகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, சீருடை வழங்கப்படாத பள்ளிகளில், சென்ற வருடச் சீருடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய வகுப்பு, புதிய சீருடை, புதிய பாடத்திட்டங்கள் எனப் பல எதிர்பார்ப்புகளுடனும், கனவுகளுடனும் மாணவர்கள் இன்று பள்ளிக்குச் செல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!