வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:10:05 (01/06/2018)

அதிகாலையிலேயே 10 பேருக்கு நடந்த கொடூரம்!

மகாராஷ்டிராவில், காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், காரில் பயணம்செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து

மஹாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஆர்னி என்ற பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த பலர், பஞ்சாபில் இருந்து மஹாராஷ்டிரா நோக்கி மூன்று கார்களில் பயணம்செய்துகொண்டிருந்தனர். அவர்கள், இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் ஆர்னி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மூன்று கார்களில் ஒரு கார் மட்டும் எதிர்பாராத விதமாக எதிரில் வந்த லாரியின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்துகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், கார் முழுவதும் நொறுங்கியதாகவும், இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.