டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த நடிகர்! | Actor Gundu Kalyanam jointed ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:12:00 (01/06/2018)

டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த நடிகர்!

டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த நடிகர் குண்டு கல்யாணம், தற்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

குண்டு கல்யாணம்

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த காலத்தில், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக நடிகர் குண்டு கல்யாணம் இருந்துவந்தார். தேர்தல் சமயங்களில், வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்துவந்தார். அந்த நிலையில், ஜெயலலிதா மறைவின்போது கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அவர் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தார்.

தற்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி பக்கம் சேர்ந்துள்ளார். அவர், அ.தி.மு.க-வில் இணைந்ததையடுத்து,  அவர் வகித்துவந்த நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதை, அ.தி.மு.க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில்,  'திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம், அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்துத் தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டி கேட்டுக்கொண்டதால், இன்று முதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார். அவர், ஏற்கெனவே வகித்துவந்த தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.