விலை உயர்ந்தது ஹோண்டா CB ஹார்னெட் 160R, CBR 250R

பஜாஜ் மற்றும் டிவிஎஸ், சமீபத்தில்தான் தனது பைக்குகளின் விலையை உயர்த்தியது.

ஹோண்டா, தனது CB ஹார்னெட் 160 மற்றும்  CBR250 பைக்கின் விலையை 559 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

CB ஹார்னெட் 160 R பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த மார்ச் மாதம்தான் கொண்டுவந்தது ஹோண்டா. எல்ஈடி ஹெட்லைட், புது கிராஃபிக்ஸ், புதுப்புது நிறங்கள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என ஃபேஸ்லிஃப்ட்டின் சில அடிப்படை மாற்றங்களே இருந்தன. மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. 14.9 bhp பவர் மற்றும் 14.5 Nm டார்க் வெளிப்படுத்தக்கூடிய அதே 162.7 cc இன்ஜின்தான். தற்போது, ஹார்னெட்டின் பேஸ் வேரியன்ட்டின் சென்னை ஆன்ரோடு விலை ரூ.95,472.

ஹோண்டா ஹார்னெட்

CBR 250R பைக் 1 வருடம் கழித்து இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது. 249.6 cc பிஎஸ் 4 இன்ஜின் கொண்ட இந்த பைக்கின் பர்ஃபார்மென்ஸில் எந்த மாற்றமும் இல்லை, முன்பு இருந்த அதே  26.5 bhp பவரும் 22.9 Nm டார்க்கும்தான் இந்த பைக்கிலும். இன்ஜினைத் தவிர எல்ஈடி ஹெட்லைட், புதிய கிராஃபிக்ஸ் மற்றும் புதுப்புது நிறங்களுடன் வெளிவந்தது. ஏபிஎஸ் உடன் வரும் இந்த பைக்கின் தற்போதைய சென்னை ஆன்ரோடு விலை ரூ.2,18,207. 

ஹோண்டா சிபிஆர் 250R

ஹோண்டா மட்டுமல்ல, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்ஸும் தனது பைக்குகளின் விலையை சமீபத்தில் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!