வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (01/06/2018)

கடைசி தொடர்பு:13:18 (01/06/2018)

கர்நாடகாவில் `காலா’ ரிலீஸாகுமா? - முதல்வர் குமாரசாமி பதில்

`கர்நாடகாவில் `காலா’ வெளியாவது இங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை' எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காலா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'காலா'. இந்தக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பதால், காலா படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது. ஜூன் 7-ம் தேதி படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்காக ரஜினி குரல்கொடுத்தார் என்ற காரணத்துக்காக, அவரது `காலா' படம் கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக சினிமா வர்த்தக சபை அறிவித்திருந்தன. இதனால், 'காலா' படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. 'காலா' வெளியிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வரை நிச்சயம் நேரில் சந்தித்துப் பேசுவோம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் முன்னதாகக் கூறியிருந்தார். 

காலா

இன்று, பெங்களூரில் செய்தியாளார்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘காலா’ படம் இங்கு வெளியாவதில் கன்னடர்களுக்கு விருப்பமில்லை. நான் நன்கு கவனித்துவருகிறேன். இந்தப் பிரச்னைகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.