ஒகி புயலில் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க ஆணை வெளியீடு - குமரி கலெக்டர் தகவல்

ஒகி புயலில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக இன்று நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

கி புயலில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக இன்று நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் குமரி மாவட்டக் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

ஒகி புயலில் இறந்தவர்களுக்கு அரசு வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒகி புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காரணமாகக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 171 மீனவர்கள் காணாமல் போனார்கள். அதில் 27 மீனவர்களின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. புயலில் மரங்கள் முறிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோனார்கள். இறந்துபோன விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். புயலில் இறந்துபோன மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, ஒகி புயலில் இறந்த மீனவர்களின் வாரிசு ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக இன்று நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறுகையில், "ஒகி புயலில் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு சத்துணவு ஊழியர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிகள் விரைவில் வழங்கப்படும்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!