நெல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வைக்கோல் போர்கள் எரிந்து சாம்பல்!

அறுவடை முடிந்ததும் சேகரிக்கப்பட்ட வைக்கோல்கள் நெல்லை குறுக்குத்துறை வயல் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 19 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.

அறுவடை முடிந்ததும் சேகரிக்கப்பட்ட வைக்கோல்கள் நெல்லை குறுக்குத்துறை வயல் பகுதியில் வைக்கப்பட்டடிருந்தன. அதில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 19 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. 

வைக்கோல் எரிந்து சேதம்

நெல்லை குறுக்குத்துறையை அருகே உள்ள கருப்பந்துறை பகுதியில் வயல்கள் அதிகமாக உள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், நெல் அறுவடை முடிந்ததால் அதிலிருந்து கிடைத்த வைக்கோலை, விவசாயிகளான அய்யாத்துரை உள்ளிட்ட 10-க்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் மாடுகளின் தீவனத்துக்காக வயல்வெளியில் வைக்கோல் போரில் வைத்திருந்தனர். 

அந்தப் பகுதியில் 19 வைக்கோல் போர் இருந்த நிலையில், திடீரென அதில் தீப்பிடித்தது. ஒரு வைக்கோல் போரில் தீப்பற்றிய நிலையில், வேகமாக வீசிய காற்று காரணமாக அடுத்தடுத்த வைக்கப்போருக்கும் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வயல்வெளிக்குள் வாகனம் செல்ல வழியில்லாததால் தீயணைப்புத் துறையினர் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. 

அத்துடன், வயல்வெளியில் நீண்ட நேரத்துக்கு தீ எரிந்து கொண்டேயிருந்தது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியதால் தீ அணைந்து விட்டது. இந்தத் தீ விபத்து காரணமாக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல்கள் எரிந்து சாம்பலாகின. ஏற்கெனவே கால்நடைத் தீவனம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் சூழலில், இந்த தீயில் வைக்கோல் எரிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். நெல்லை சந்திப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!