சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக 7 நீதிபதிகள்..! குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 7 பேரை நீதிபதிகளாகக் நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மொத்தம் 56 நீதிபதிகள் பணியாற்றிவருகின்றனர். தலைமை நீதிபதியாக கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரா பானர்ஜி இருந்துவருகிறார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதியதாக 7 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது.

தற்போது, அந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நிர்மல்குமார், சுப்ரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணன் ராமசாமி, ஆஷா, சரவணன், இளந்திரையன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 7 பேருக்கும் விரைவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!