நிலத்தடி நீர் சூறையாடலைக் கண்டித்து கிராம மக்கள் நடத்திய நூதன போராட்டம்!

ராமேஸ்வரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவு நிலத்தடி நீரை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் காதில் பூ சுற்றி நூதன போராட்டம் நடத்தினர்.

 ராமேஸ்வரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவு நிலத்தடி நீரை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் காதில் பூ சுற்றி நூதன போராட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரத்தில் காதில் பூ சுற்றி நூதன போராட்டம்

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பல்வேறு நீர் நிலைகள் இறால் பண்ணையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இந்நிலையில் தனியார் சிலர் நிலத்தடி நீரை வியாபார நோக்கில் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நிலத்தடி நீர் விற்பனைக்குத் தடை விதித்த நீதிமன்றம் பின்னர், நாள் ஒன்றுக்கு 11 கிணறுகளிலிருந்து 55 லாரி குடிநீர் மட்டுமே அனுமதி அளித்தது.

இதைச் சாதகமாக்கிக்கொண்ட குடிநீர் விற்பனையில் ஈடுபடும் தனியார்கள் தினந்தோறும் கணக்கு வழக்கின்றி நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டிய மாவட்ட மற்றும் தாலுகா அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதை கண்டித்து ராமேஸ்வரம் தீவு கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் காதில் பூ சுற்றிக்கொண்டு ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் நூதன போராட்டம் நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!