தூத்துக்குடி சம்பவத்தில், தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது -கோவையில் மத்திய அமைச்சர் தகவல்!

தூத்துக்குடி சம்பவத்துக்காக, தமிழ அரசுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சம்பவத்துக்காக, தமிழ அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யவர்தன் ராதோர்

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், மத்திய அரசின் 4 ஆண்டுக்கால ஆட்சி சாதனை விளக்கக் கூட்டம், பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோர் கலந்துகொண்டு, மத்திய அரசின் திட்டங்கள்குறித்து விளக்கினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியாவைப் பற்றி எங்களுக்கு அக்கறை இருக்கிறது. சுதந்திரமாக எழுத ஊடகவியலாளருக்கு உரிமை உண்டு. 3 மாதங்களுக்கு ஒருமுறை, பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, எங்களின் பணிகள் நடந்துவருகின்றன. தொடர்ந்து, மக்களிடம் நேரடியாகப் பேசிவருகிறோம். அதுவே எங்களது வெற்றிக்கு வழிவகுக்கும். அடுத்த ஆண்டுக்குள்,  20 மாவட்டங்களில் விளையாட்டுப் பள்ளிகள் தொடங்கப்படும். தூத்துக்குடி சம்பவத்திற்காக, தமிழக அரசுக்கும் மற்றும் காவல்துறைக்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!