வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (02/06/2018)

கடைசி தொடர்பு:16:00 (02/06/2018)

கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கம்: கோவையை ஒரு மாதம் கலங்கடித்த ஆசாமி கைது!

கோவையில், 2,000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டவரை போலீஸார் கைதுசெய்தனர்.

கோவையில், 2,000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டவரை போலீஸார் கைதுசெய்தனர்.

கள்ளநோட்டுகள்

கோவை, வேலாண்டிபாளையம் மருதக் கோனார் வீதியைச் சேர்ந்தவர், ஆனந்தன். இவர், நேற்றிரவு சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஆனந்தனிடம் இருந்த நான்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து காவல்துறையினர் பார்த்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.  

இதுகுறித்து ஆனந்த் போலீஸாரிடம், தனியார் நிதிநிறுவனத்தில் தற்போது  கலெக்‌ஷன் ஏஜென்டாகப் பணிபுரிந்துவருகிறேன். எனது நண்பர் சுந்தர் என்பவர் வேலாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கு வைத்துதான், கடந்த ஒன்றரை மாதமாக 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டோம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த இடத்தில் போலீஸார் சோதனைசெய்து, கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம், கணினி, 82 லட்ச ரூபாய்  கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளநோட்டு தடுப்புப் பிரிவினர், ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தனுக்கு உதவியவர்களை சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.