வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (02/06/2018)

அமேசான் ப்ரைம் விடீயோவின் `கேங்க் ஸ்டார்ஸ்' சீரீஸ்

அமேசான் ப்ரைம் வீடியோ `கேங்க் ஸ்டார்ஸ்' எனும் தனது முதல் சீரீஸை கடந்த புதன் கிழமை வெளியிட்டது. தெலுங்கில் பல பிரபல நடிகர்களை வைத்து இந்த சீரீஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெகபதி பாபு, நவ்தீப், ஸ்வேதா பாசு பிராசாத், சித்து ஜோனலாகதா, அபூர்வா அரோரா, போசாலி கிருஷ்ணா, முரளி மற்றும் சிவாஜி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த `கேங்ஸ்டர்' சீரீஸ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கேங்க் ஸ்டார்ஸ்

இதைத் தயாரித்துள்ள `சில்லி மாங்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் ரெட்டி கூறியதாவது, ``நாங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. `கேங்க் ஸ்டார்ஸ்' சீரீஸ் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் மற்ற மொழிகளிலும் இதை நாங்க வெளியிட்டிருக்கிறோம். ரசிகர்களின் பார்வைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்." என்று கூறியிருக்கிறார். `ட்ராமா, திரில்லர், காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த கலவையாக இந்த சீரீஸ் இருக்கும். தென்னிந்தியா மட்டுமல்ல வட இந்தியர்களும் விரும்பும்படி இக்கதை அமைக்கப்பட்டுள்ளது' என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.