சூர்யாவின் மகன் பெயரை தன் படத்துக்கு வைத்த கார்த்தி!

55 கோடி பட்ஜெட் செலவில் உருவாகி வரும் கார்த்தி - ரகுல் சிங் படத்துக்கு `தேவ்' என்று படக்குழுவினர் டைட்டில் வைத்துள்ளனர்.  

தீரன், கடைக்குட்டிசிங்கம் படங்களுக்குப் பிறகு கார்த்தி புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் காட்சிகளை முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கிய ரஜத். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்லவிருக்கிறார். ஹைதராபாத்தில் ஒரு கார் சேஸிங் சீனைப் படமாக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இமயமலை, ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளில் படமாக்கவுள்ளனர். 55 கோடி பட்ஜெட் செலவில் உருவாகிவரும் இப்படத்துக்குப் படக்குழு `தேவ்' என்று டைட்டில் வைத்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், வம்சி முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். தனது அண்ணனும், நடிகருமான சூர்யாவின் மகன் பெயர் தேவ். இவரது பெயரே தற்போது கார்த்தி படத்துக்குத் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!