வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:05:00 (03/06/2018)

கெளதம் கார்த்திக்கு ஜோடியாகிறார் மஞ்சிமா மோகன்!

 கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

'கொம்பன்', 'குட்டிப்புலி', 'மருது', 'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கி வரும் படம் 'தேவராட்டம்'. கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என தீவிரமாக தேடி வந்த படக்குழு, மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செய்தியை  தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இந்தப் படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். தொடர்ந்து சாதியை மையமாக வைத்து படம் எடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், இந்தப் படத்தின் பெயரும் அப்படியே இருப்பதால் படமும் அப்படிதான் இருக்கும் என்ற பேச்சுகள் வந்துகொண்டிருக்கிறது. 'இப்படை வெல்லும்' படத்திற்கு பிறகு, மஞ்சிமா நடிக்கும் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் கார்த்திக் நடிப்பில் 'மிஸ்டர். சந்திரமெளலி' படம் வரும் ஜூலை 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க