ரத்தான ’விஜய் அவார்ட்ஸ்’ விழா இன்று நடக்கிறது!

10வது விஜய் அவார்ட்ஸ் விருது விழா இன்று நடக்கிறது

விஜய் தொலைக்காட்சி சினிமாக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘விஜய் அவார்ட்ஸ்’ என்ற விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த விழா  10-வது ஆண்டான இந்த வருடம் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விழா கடந்த மே மாதம் 26-ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், நடிகர் நடிகைகள் விழாவில் கலந்து கொள்ளத் தயங்கினர். இதனால், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது.

விஜய் அவார்ட்ஸ்

ரத்து செய்யப்பட்ட அந்த விழா இன்று (ஜூன் 3) அதே நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்பவர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட டிக்கெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ராதா, இயக்குநர்கள் அனுராக் கஷ்யப், கே.எஸ்.ரவிக்குமார், பாக்யராஜ், நடிகர் யூகி சேது ஆகியோர் விருதுக் கமிட்டியின் நடுவர்கள். தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்நிகழ்வில், நடிகைகள் அஞ்சலி, சாயிஷா சாய்கல், காஜல் அகர்வால் ஆகியோரின் அசத்தலான டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்களும் அரங்கேறக் காத்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!