வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (03/06/2018)

கடைசி தொடர்பு:10:58 (03/06/2018)

இணையத்தைக் கலக்கிய ஒரு நிமிட நடனம் - பேராசிரியருக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஒரு நிமிடம் நடனமாடி இணையத்தைக் கலக்கிய பேராசிரியர், தற்போது விடிஷா நகராட்சியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடனம்

மத்திய பிரதேசம், விடிஷா பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ் ஸ்ரீவச்தவா என்கிற 46 வயதான பேராசிரியர், சில தினங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் நடமாடியிருந்தார். அதை சிலர் வீடியோவாக எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டர். பின்னர் யாரும் எதிர்பார்க்காதவகையில் அந்த வீடியோ பெரும் வைரலாக பரவியது. அதன் பின் நடனமாடிய பேராசிரியரும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டர். அவர் நடிகர் கோவிந்தாவின் மிகத் தீவிர ரசிகன் என்பதால் அவரை போலவே நடனம் ஆடப் பழகிக்கொண்டதாக பின்பு தெரியவந்தது.

இந்நிலையில் மிக விரைவில் பிரபலமான பேரசாரியர் சஞ்ஜீவை விடிஷா நகராட்சியின் விளம்பர தூதராக நிமித்துள்ளது அந்நகராட்சி நிர்வாகம். இது குறித்து பேசிய பேராசிரியர், “நடப்பதை என்னால் சற்றும் நம்பமுடியவில்லை. என் நடனம் இவ்வளவு வைரல் ஆகும் என எதிர்பார்க்கவில்லை. நான் 1982 முதல் நடனமாடி வருகிறேன். எனது முன் மாதிரி நடிகர் கோவிந்தா தான். 
இது எனக்கு மிகத் பெரிய விஷயம், பலர் என்னையும் என் நடனத்தையும் விரும்புகிறார்கள். எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சைகானுக்கும் எனது நன்றிகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு சிறிய நடன அசைவின் மூலம் அனைவரையும் கவர்ந்த பேராசிரியரை விடிஷாவின் தூதராக நியமித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.