சர்வதேச விமான நிலைய கடைகளில் இனி ஜி.எஸ்.டி கிடையாது! | No GST For International Passengers At Airport 'Duty-Free' Shops

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:22:00 (03/06/2018)

சர்வதேச விமான நிலைய கடைகளில் இனி ஜி.எஸ்.டி கிடையாது!

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலைய கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு இனி ஜி.எஸ்.டி செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜி எஸ் டி

கடந்த வருடம் ஜூலை 1ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த போது மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஜிஎஸ்டி அமலானது முதல் மாநிலங்களுக்கான நிதி வருவாய் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் சுங்க வரிவிலக்கு பெற்ற கடைகள் உள்ளன. சர்வதேச பயணிகளுக்காக இங்கு உள்ள கடைகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 

இருப்பினும் ஜி.எஸ்.டி அமலானது முதல் இந்தக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், தான் சர்வதேச பயணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த உத்தரவு கடந்த மார்ச் மாதம் சட்ட மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலைய  `டூட்டி பிரீ' கடைகளில் இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க