வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (03/06/2018)

கடைசி தொடர்பு:19:10 (03/06/2018)

`பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் கருணாநிதி!’ - ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

கருணாநிதி - ரஜினி

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தோரணங்கள், வாழை மரங்கள், வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட கோபாலபுரம்  இல்லமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக இன்று மதியம் இன்று தனது பிறந்த நாளையொட்டி, கோபாலபுரம் இல்லத்தின் முன் கூடியிருந்த தொண்டர்களை நேரில் சந்தித்தார். மேலும் கையசைத்து தொண்டர்களை மகிழ்ச்சியடையச் செய்தார். கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். 

இதற்கிடையே, பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, திருமாவளவன்  மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  ``நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.." எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க