`2 ஆண்டுகளில் 2.53 லட்சம் மக்களுக்கு ரூ.416 கோடி நிவாரண நிதி!’ - கேரள அரசு தகவல்

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் `முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி மூலம், 2.53 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பினராயி விஜயன்

கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டில் மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸை தோற்கடித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, பினராயி விஜயன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பிறகு, சாலை விபத்துகள், தீ விபத்து ,மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக வழங்கும், முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியானது ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

இந்த நிவாரண நிதிகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவிகோரும் மக்களுக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகளை அரசு செய்து வருகிறது. இயற்கை பேரிடரால் இறந்தவர்களுக்கு, அவர்களது வாரிசுகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றன. 

இந்நிலையில், முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.53 லட்சம் பேர் முதலமைச்சர் பேரழிவு நிவாரண நிதியின் கீழ் நிதி உதவிகளைப் பெற்றுள்ளனர். நிவாரண நிதியாக ரூபாய் ரூ.416 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!