வெளியிடப்பட்ட நேரம்: 07:42 (04/06/2018)

கடைசி தொடர்பு:07:50 (04/06/2018)

கன்னிப்பூ சாகுபடிக்காக இன்று திறக்கப்படுகிறது பெருஞ்சாணி அணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து தண்ணீர் இன்று திறக்கப்படுகிறது.

ன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள மரபுப்படி நெல் விவசாயம் செய்யப்படுகிறது. மலையாள காலண்டர் அடிப்படையில் கன்னி மாதத்தில் செய்யப்படும் சாகுபடி, கன்னிப்பூ எனவும் கும்ப மாதம் நடக்கும் விவசாயம், கும்பப்பூ எனவும் அழைக்கப்படுகிறது. இப்போது, கன்னிப்பூ சாகுபடிக்காக விவசாயிகள் வயல்களை உழும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குமரி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணையைப் பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இதற்காக, அணையிலிருந்து தண்ணீர் முழுவதும் வற்றவைக்கப்பட்டுள்ளது. இப்போது, பருவமழை பெய்துவருவதால் 48 அடி கொள்ளளவுகொண்ட பேச்சிப்பாறை அணையில் 6.60 அடி தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அவசர விவசாயத் தேவைக்காக 77 அடி கொள்ளளவுகொண்ட பெருஞ்சாணி அணையில் 62.30 அடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீரை கன்னிப்பூ சாகுபடிக்காகத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் பெருஞ்சாணி அணை திறக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.