`பஞ்சரான கார் டயர்களைப்போல உள்ளது இந்தியப் பொருளாதாரம்’ - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இந்தியாவின் பொருளாதார நிலை, மூன்று டயர்களும் பஞ்சரான காரின்  நிலையைப் போலஉள்ளதாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், “தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசாங்கச் செலவினங்கள் ஆகிய நான்கும் காரின் நான்கு சக்கரங்களைப் போன்றது. இவற்றில் ஒன்று பஞ்சர் ஆனால்கூட வண்டி ஓடுவது மெதுவாகிவிடும். 

ஆனால் தற்போது, இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை காரின் மூன்று சக்கரங்களும் பஞ்சராகியுள்ளன. சுகாதாரம் மற்றும் இதர செலவு என அரசாங்கச் செலவினங்கள் மட்டுமே அதிகரித்துவருகின்றன. இதனால்தான் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கிறது. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் தகுதியற்றது. இந்த அரசு, இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையை மோசமாக்கிவிட்டது.” எனக் கடுமையாக் குற்றம் சாட்டியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!