வெள்ளை மாளிகையில் `இப்தார்' விருந்துக்கு சம்மதம் தெரிவித்த ட்ரம்ப்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி, உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைப்பிடித்துவருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்ப் இப்தார் விருந்தளிக்க உள்ளதாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான்

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்றார். ட்ரம்ப் பதவியேற்றதும்,வெள்ளை மாளிகையில் பல ஆண்டுக்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ரமலான் விருந்தைப் புறக்கணித்து, மரபைத் தகர்த்தெறிந்தார். ட்ரம்ப் அரசு, பதவியேற்ற நாளில் இருந்தே இஸ்லாமியர்கள் மீதான அதிருப்தியையும் விமர்சனத்தையும் முன்வைத்தபடியே இருந்தது. மேலும், இஸ்லாமிய நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேற முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதையடுத்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக ட்ரம்ப் அரசு எடுத்த நடவடிக்கைகள் உலக நாடுகள் மத்தியில் கடுமையாக விவாதிக்கப்பட்டன. இதனால் அதிபர் ட்ரம்ப், இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது எண்ணத்தை மாற்றியுள்ளார். இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில், ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!