25 பேரின் உயிரைப் பறித்த எரிமலை... சாம்பலால் மூடப்பட்ட கிராமங்கள் # ShockingVideo

மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நகரில் (கவுதமாலா நாட்டின் தலைநகர்), பியுகோ எரிமலை வெடித்துச் சிதறியதில் 25 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எரிமலை
 

கவுதமாலா நாட்டின் தலைநகரின் தென் மேற்கில், 40 கிலோ மீட்டர் தொலைவில் பியூகோ (Fuego) எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை, நேற்று திடீரென்று வெடித்துச் சிதறியதால் நதிபோல ஓடிய எரிமலைக் குழம்பு, அருகில் அமைந்துள்ள எல்-ரோடியோ கிராமத்தில் புகுந்தது. அதனால், வீடுகள் கடுமையான சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எரிமலை

சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெப்பம் மிகுந்த எரிமலைக் குழம்பு வெளியேறிவருகிறது. மேலும், எரிமலையிலிருந்து வெளியாகும் கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக, சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லா அரோரா விமான நிலையம்  மூடப்பட்டுள்ளது. கவுதமாலா தலைநகரில் அவசர கால நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் ஜிம்மி மோரல்ஸ் அறிவித்துள்ளார்.  “எரிமலை வெடித்துச் சிதறியதால், குறைந்தபட்சம் மூன்று கிராமங்களில் பேரழிவு நிலைமை இருக்கக்கூடும்” என்றும் ஜிம்மி மோரல்ஸ் தெரிவித்துள்ளார். 


எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 3000-க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனராம். இந்தப் பேரழிவு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால், உயிர்ச் சேதம் குறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

எரிமலை
 

பியூகோ எரிமலை வெடித்துச் சிதறி, கரும்புகையை உமிழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!