வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:14:40 (04/06/2018)

கரும்புகையுடன் பற்றி எரிந்த பிளாஸ்டிக் ஆலை! - தப்பிய குடியிருப்பு

ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை

ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை  தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி அணைத்தனர். கொஞ்சம் தாமதித்திருந்தாலும்  உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீ விபத்து பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் ஆலை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் பகுதியில் செயல்படும் பாலிஸ்பின் எக்ஸ்போர்ட் என்ற பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் ஆலை இயங்குகிறது. இங்கு இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் ஆலைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

அப்பகுதி முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கரும்புகை சூழ்ந்தது. தகவல் வந்ததும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கரிவலம்வந்தநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து  தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.  பிளாஸ்டிக் பொருள்களில் தீப்பிடித்ததால் பெரும் ஜுவாலையுடன் பல மீட்டர் உயரத்துக்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. தீப்பிடிக்கக் காரணம் என்ன, அங்கே வேலை செய்யும்  ஆட்களுக்கு பாதிப்பு  ஏற்பட்டுள்ளதா என்பதை ஆலையின் நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க