`காளையை அடக்கச் சொன்னால் என் நிலைமை என்னவாகும்' - `ஜல்லிக்கட்டு நாயகன்’ அழைப்புக்கு கலகலத்த ஓ.பி.எஸ்

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம், `ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம்' எனக் கேட்டுக்கொண்டார்.

ஓபிஎஸ்

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 15-ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பட்ஜெட் மீதான விவாதம் மட்டுமே நடைபெற்று. இதையடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காகவும் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காகவும் கடந்த மே 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. 

இந்த நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியது. இதில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறு வருகிறது. இதில், கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், `என் பெயரை சொல்லி அழைக்கையில் யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட வேண்டாம். ஜல்லிக்கட்டு நாயகன் எனக் கூறிக்கொண்டு, என்னை காளையை அடக்கச் சொன்னால் என் நிலை என்னவாகும்' என்று சட்டசபையில் கலகலப்புடன் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!