ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

தாய் கண்முன்னே சிறுமியைத் தூக்கிச்சென்ற வாலிபர்! - அதிரடி காட்டிய பொதுமக்கள்

சிறுமியை கடத்தியதாக தாக்கப்பட்ட வாலிபர்

திருப்பூர் அருகே சிறுமியைக் கடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்துப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சின்னாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - உமா தம்பதியர். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று காலை உமா தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு காலைக்கடன் கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது உமாவின் குழந்தை மட்டும் அங்கு தனியாக நின்றுகொண்டு இருப்பதை கவனித்த இளைஞர் ஒருவர், அந்தச் சிறுமியைக் கையில் தூக்கிக்கொண்டு அக்கம்பக்கத்தில் நோட்டமிட்டிருக்கிறார். இதனைக்கண்ட உமா அதிர்ச்சியில் சத்தம்போட, சுதாரித்துக்கொண்ட அந்த இளைஞரோ சிறுமியைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இளைஞரை மடக்கிப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் கோபம் அதிகரிக்க சுற்றிநின்று அவருக்குத் தர்ம அடியும் கொடுக்கத் தொடங்கினர். மேலும், காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டும், காவல்துறையினர் வர வெகுநேரமானதால் தொடர்ந்து பொதுமக்கள் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கிக்கொண்டே இருந்தனர். பொதுமக்கள் விசாரித்ததில் அந்த இளைஞரின் பெயர் சிவா என்றும், திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். பின்னர் ஒருவழியாக 2 மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரிடம் இளைஞரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். 

தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் திருப்பூர் மத்தியக் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!