கேரள சட்டப்பேரவையை அதிரவைத்த எம்.எல்.ஏ!

முகத்தில் மாஸ்க் மற்றும் கைகளில் உறை அணிந்தபடி கூட்டத்தொடருக்குச் சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-வால் கேரள சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

முகத்தில் மாஸ்க் மற்றும் கைகளில் உறை அணிந்தபடி கூட்டத்தொடருக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-வால்  கேரள சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

எம்எல்ஏ பாறக்கல் அப்துல்லா

கேரள சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி சட்டசபை எம்.எல்.ஏ பாறக்கல் அப்துல்லா முகத்தில் மாஸ்க் மற்றும் கைகளில் கையுறை அணிந்தபடி சட்டசபைக்கு வந்திருந்தார். கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காரணமாகச் சுமார் 17 பேர் இறந்துபோனதால் அந்த மாவட்ட மக்கள் சாலைகளில் நடமாடவே பயப்படுகிறார்கள். வீடுகளுக்குள் முடங்கியவர்கள் பாதி, வேறு மாவட்டங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தவர்கள் மீதி எனக் கோழிக்கோடு மாவட்டமே அதகளப் பட்டுக்கிடக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் சாலையில் நடமாடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையுறைகளுடனும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியும்தான் வெளியே செல்கிறார்கள்.

எம்.எல்.ஏ. பாறக்கல் அப்துல்லா

இந்த நிலையில்தான் மக்களின் மனநிலையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக மாஸ்க் அணிந்து வந்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பாறக்கல் அப்துல்லா தெரிவித்தார். நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார். கேரள சட்டசபையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. மாஸ்க் அணிந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!