நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி!

நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா 720 மதிப்பெண்ணுக்கு 676 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், அகில இந்திய அளவில் 12 வது ரேங்கைப் பெற்றுள்ளார். சென்னை சி.பி.எஸ்.இ பள்ளி மாணவியான கீர்த்தனா பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில்  500-க்கு 494 மதிப்பெண்ணையும் பெற்றுள்ளார்.

நீட்


இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் முடிவு இன்று (04.06.2018) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் இந்திய அளவில் 13,26,725 பேர் விண்ணப்பித்து, 12,69,922 பேர் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வை ஆங்கிலத்தில் 10,60,923 பேரும் இந்தியில் 1,46,542 பேரும் தமிழில் 24,720 பேரும், குஜராத்தியில் 57,299 பேரும் இதர மொழியில் 37,259 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 5,56,621 பேர் தேர்வு எழுதியதில் 3,27,575 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 1,71,856 பேரில் 87,311 பேரும், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்களில் 75,232 பேரில் 31,360 பேரும், பொதுப்பிரிவில் 4,66,213 பேர் 2,68,316 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 1,20,000 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து 1,14,602 பேர் தேர்வெழுதியுள்ளனர். இதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 39% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

நீட்

பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!