அரசுப் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு 1000 ரூபாய் ரொக்கப்பரிசு...!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோருக்கு ரூ.1000 ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது. 

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்குப் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவது இல்லை. தனியார் பள்ளியையே அவர்கள் நாடிச் செல்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதைக் காரணம் காட்டி குறைந்த மாணவர்களே படிக்கும் பள்ளியை அரசு மூட முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் இதை அரசு மறுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரிய தெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு ரூபாய் 1,000 பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகக் கிராமத்தினர், ஆசிரியர்கள் பங்களிப்போடு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு தலா 1000 ரூபாய் பணம் வழங்கலாம் எனப் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி  இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 2 பேர், 6 ஆம் வகுப்பில் 3 பேர் சேர்ந்தனர். அந்த 5 பேரின் பெற்றோர்களுக்கும் அறிவித்தபடி  தலா ரூபாய் 1,000 என மொத்தம்  ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது என்றனர் அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!