வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (05/06/2018)

கடைசி தொடர்பு:01:30 (05/06/2018)

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தீபமேற்றி வழிபட புதிய அணையா விளக்கு அமைப்பு!

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் விளக்கேற்றி வழிபட புதிய அணையா விளக்கு நந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் விளக்கேற்றி வழிபட புதிய அணையா விளக்கு நந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள் அணையா விளக்கு


கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயிலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீர வசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. மேலும் இப்பகுதியில் இருந்த ஏராளமான கடைகள் தீயில் எரிந்து நாசமாயின. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பாதுகாப்பு மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கோயில்களில் தீ விபத்தினை தடுக்கும் வகையில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதன்படி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சுவாமி, அம்பாள் சன்னிதிகளில் முன் உள்ள கொடிமர பகுதிகளில் தீபம் ஏற்றி வழிபடுவதை பாதுகாப்பாக மேற்கொள்ளும் வகையில் பித்தளையில் உருவாக்கப்பட்ட அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அனையா விளக்கில் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் எண்ணையினை ஊற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுவாமி சன்னிதியின் முன் உள்ள நந்தி மண்டபத்தில் இந்த அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அம்மன் சன்னிதி கொடி மரம் அமைந்துள்ள பகுதியிலும், நவக்கிரக மண்டபத்திலும் இதேபோன்ற விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 4 புறமும் கண்ணாடி பொறுத்தப்பட்டு இரும்பு விளக்கில் திரியிட்டு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கினை திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.