மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பாக நவீன கருவிகள்!

நெல்லை மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லாத மின்விசை சக்கரங்களை 42 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லாத மின்விசை சக்கரங்கள் அடங்கிய கருவிகள் 42 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

மண்பாண்ட கருவிகள்

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பாக மண்பாண்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள மண்பாண்டத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்யும் வகையில் விலையில்லா மின்விசை சக்கரம் வழங்கப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 42 பயனாளிகளுக்கு 8.50 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஸ் வழங்கினார்.  முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் 13 பயனாளிகளுக்கு காலிபெர், மூன்று சக்கர வாகனம், உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் பேசிய ஆட்சியர், ’’மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் அரசு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். சிலகல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல்கல் வந்துள்ளன. அதுபற்றி மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்தில் சீசன் தொடங்கும் நிலையில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!