`பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க தந்தைமார்களுக்கும் விடுப்பு' - ஹரியானா அரசு அறிவிப்பு!

பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு இனி 15 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். 

மனோகர் லால்

கடந்த 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான மகப்பேறு சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பெண்களுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடி மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. இதேபோல் தமிழக அரசின் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் அரசுத் துறையில் பணிபுரியும் ஆண்களுக்குக் குழந்தைகளை பராமரிக்க விடுப்பு அளித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,  ``பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு இனி 15 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்" எனத் தெரிவித்தார். இதன்மூலம் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க ஆண்களுக்கு விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக ஹரியானா இடம்பெற்றுள்ளது. முன்னதாக மத்திய அரசின் சில துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் சில கார்ப்பரேட் கம்பெனி ஆண் ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மனோகர் லால் கட்டாரின் இந்த அறிவிப்பு அம்மாநில அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!