வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (05/06/2018)

கடைசி தொடர்பு:10:42 (05/06/2018)

கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன்

தி.மு.க தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

பொன்.ராதாகிருஷ்ணன்


தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா, நேற்று தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தொண்டர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று, நேரில் நலம் விசாரித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, கனிமொழி உடனிருந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாது, இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி. சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்.  கருணாநிதி, அவரது சந்தோஷத்தை முகத்தில் காட்டினார்' என்று தெரிவித்தார்.