'யார் பெரியவர்?'- மதுரையில் நடந்த பழிக்குப்பழி கொலை

முன்னாள் மண்டலத் தலைவரும், தி.மு.க மாநில செயற்குழு உறுப்பினருமான வி.கே.குருசாமியின்

முன்னாள் மண்டலத் தலைவரும், தி.மு.க மாநில செயற்குழு உறுப்பினருமான வி.கே.குருசாமியின் உறவினர் வேலுகுமார் என்பவர், நேற்றிரவு படுகொலைசெய்யப்பட்ட சம்பவம், மீண்டும் மதுரையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வேலுகுமார், நேற்றிரவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே வேலுகுமார் பலியானார். கொலை செய்த கும்பல், அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை  மறித்து ஏற முயன்றபோது, இவர்களின் தோற்றத்தைப் பார்த்து, ஏற்ற மறுத்த ஆட்டோ டிரைவர் விஜய் என்பவரையும் வெட்டிவிட்டு வேறொரு ஆட்டோவில் ஏறி தப்பித்துச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.  ஆட்டோ டிரைவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொலையான வேலுகுமார்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலைபற்றி விசாரித்தபோது, கீழ் மதுரைப் பகுதியில் தி.மு.க முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டிக்கும் நீண்டகாலமாகப் பகை இருந்துவந்தது. ஒரே ஊர், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும், மதுரையில் யார் பெரியவர் என்ற போட்டியில், இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  கடந்த ஆண்டு, ராஜபாண்டியின் மகனை குருசாமி தரப்பினர்  கடத்திச்சென்று கொன்றனர். அதற்குப் பதிலடியாக  குருசாமியைப் பழிவாங்க ராஜபாண்டி தரப்பினர் தொடர்ந்து முயற்சித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ராஜபாண்டியின் ஆட்கள் இரண்டுபேர், மதுரை சிக்கந்தர் சாவடியில் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். சில மாதங்கள் அமைதியாக இருந்த நிலையில், வேலுகுமார் கொலைசெய்யப்பட்டதன்மூலம் மீண்டும் அவர்களின் போர் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!