`இது மோசமான செயல்..!’- ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய வாக்கர் யூனிஸ்

ரமலான் மாதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளை  கேக் வெட்டி கொண்டாடியதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, வாகர் யூனிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். 

வாக்கர் யூனிஸ்


இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்கர் யூனிஸ் கேக்வெட்டி கொண்டாடினார். அங்கு எடுத்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்நிலையில், ரமலான் மாதத்தில் கேக்வெட்டி கொண்டாடிய நிகழ்ச்சி, பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வாக்கர் யூனிஸ் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கர் யூனிஸ் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார் .


அதில், `வாசிம் அக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டதில் கேக்வெட்டியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். புனித ரமலான் மாதத்திற்கும் நோன்பிற்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இது மோசமான செயல். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!