பிரபு சாலமனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

'மைனா' படத்திலிருந்து இயற்கை சார்ந்த விஷயங்களுடன் ஒன்றிய படங்களை எடுக்கக்கூடியவர், இயக்குநர் பிரபு சாலமன். 'மைனா', 'கும்கி', 'கயல்', 'தொடரி' எனத் தொடர்ந்து இவரின் படங்களெல்லாம் காடு, மலை, கடல், மரம் எனக் காட்சிகளை நமக்கு பிரதிபலித்தது. இந்நிலையில், 'தொடரி' படத்துக்குப் பிறகு, 'கும்கி 2' படத்தை இயக்கப்போவதாக பிரபுசாலமன் தெரிவித்திருந்தார். இதற்காக தாய்லாந்து பகுதிகளைச் சுற்றி லொக்கேஷன் பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவர்,  சத்தமே இல்லாமல்  கேரளாவில் தனது முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ராணா, புல்கிட் சாம்ராட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஈராஸ் நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில், யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. 

காடன்


தமிழில் இந்தப் படத்துக்கு 'காடன்' என்றும், தெலுங்கில் 'ஆரண்யா' என்றும், இந்தியில் 'ஹாத்தி மேரே சாத்தி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை விஷ்ணு விஷால் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அடுத்த வருடம் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!