வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (05/06/2018)

கடைசி தொடர்பு:15:03 (05/06/2018)

அடுத்தடுத்து நான்கு படங்கள் அறிவிப்பு! - ரசிகர்களை குஷிப்படுத்திய சிம்பு

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, `90ml' படத்துக்கு இசையமைத்தும், `பெரியார் குத்து' என்ற ஆல்பத்தை பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சிம்புவின் அடுத்த நான்கு படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சிம்பு

34வது படம் - `பைரவா', `வீரம்' முதலிய படங்களை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்கவிருக்கிறார். 

35வது படம் - தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். 

36வது படம் - `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் சீக்வெலாக உருவாகவிருக்கும் `விண்ணைத்தாண்டி வருவேன்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 

37வது படம் - கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு நடிக்கவிருக்கிறார். 

தற்போது, செர்பியாவில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் தனது போர்ஷனை முடித்த சிம்பு, இன்னும் இரண்டு நாள்களில் சென்னை வந்துவிடுவார் என்றும், இந்த மாதத்துக்குள் அதற்கான டப்பிங் பணிகளையும், ஓவியா நடிக்கும் `90ml' படத்தின் இசையமைப்பு வேலைகளையும் முடித்துவிட்டு, 34 வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க