விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ராதிகா மிரட்டும் `துருவ நட்சத்திரம்’ புதிய டீசர்!

துருவ நட்சத்திரம்

விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். முதலில் இரண்டு டீசர்கள் வெளியிடப்பட்டன. அதில் விக்ரம், வில்லன் ஒருவரிடம் தொலைபேசியில் பேசுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிக் கூடுதல் தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது.  

துருவ நட்சத்திரம்

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில் சிம்ரன், ராதிகா, டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. இதில் விக்ரம், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். டீசர் முழுவதும் அதிரடிக் காட்சிகள், துப்பாக்கி என மிரட்டியிருக்கும் விக்ரமின் லுக் இந்தப் படத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

சாமி 2-ம் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் இன்று  துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!