நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்

தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஷில்பா

ரிசர்வ் வங்கி, கடந்த வருடம் இறுதியில் பிட் காயின்  பயன்படுத்த கூடாது என எச்சரித்திருந்தது. அதையும் மீறி  இந்தியாவில் சிலர் பிட் காயின் உபயோகப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பிட் காயின் முறைகேடு தொடர்பாகத் தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் ராஜ் குந்த்ராவுக்கு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!