`ஒரு பிணமாக வாழ விரும்பவில்லை' - இளைஞரின் ஐ.ஏ.எஸ் கனவை தகர்த்த அந்த 4 நிமிடங்கள் | rules are rules, but bending them for a good purpose- varun suicide note says

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/06/2018)

`ஒரு பிணமாக வாழ விரும்பவில்லை' - இளைஞரின் ஐ.ஏ.எஸ் கனவை தகர்த்த அந்த 4 நிமிடங்கள்

நல்ல நோக்கத்துக்காக விதிகள் தளர்த்தப்பட வேண்டுமென்று வருண் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

`ஒரு பிணமாக வாழ விரும்பவில்லை' - இளைஞரின் ஐ.ஏ.எஸ் கனவை தகர்த்த அந்த 4 நிமிடங்கள்

ல்ல நோக்கத்துக்காக விதிகள் வளைவதே முறையானது என்று தேர்வறைக்கு 4 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதியளிக்கப்படாத வருண் சுபாஷ் சந்திரன் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  

தற்கொலை செய்து கொண்ட வருண்

கர்நாடகத்தைச் சேர்ந்த வருண் சுபாஷ் சந்திரனுக்கு ஆட்சியர் ஆவதே லட்சியம். இதற்காகவே உழைத்துக்கொண்டிருந்த வருண், நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். தேர்வுக்காகத் தன்னை தீவிரமாகத் தயார்செய்தும் வந்தார். ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதச் சென்ற வருண், தவறுதலாகக் காலை 8.45 மணிக்கு வேறு ஒரு மையத்துக்குச் சென்றுவிட்டார். இந்த மையம் அல்ல என்று தெரிந்த பின், தனக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு ஓடிய வருண் 9.24 மணிக்கு அங்கு சென்றடைந்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட 4 நிமிடங்கள் தாமதமானதால், அதிகாரிகள் வருணை மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. 

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் 9.20 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும். 9.30 மணிக்கு தேர்வு தொடங்கிவிடும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தன் கவனக்குறைவால், தேர்வு எழுத முடியாமல் வேதனைக்குள்ளான வருண் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் போலீஸாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''விதிகள் விதிகள்தான். ஆனால், நல்ல நோக்கத்துக்காக விதிகள் வளைவதே முறையானது. என் அறையில் உள்ள புத்தகங்களை என் தோழியிடம் வழங்கிவிடுங்கள். என் தற்கொலை தொடர்பாக அவரிடம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு இது. விளைவுகளை உணர்ந்தே இந்த முடிவை எடுத்தேன்'' என்று கூறப்பட்டிருந்தது.

குடும்பத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''இனிமேல் நான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு பிணமாக வாழ நான் விரும்பவில்லை. மரணம் எப்போதும் நிகழக்கூடியதுதான்'' என்று சொல்லப்பட்டிருந்தது. கடைசி வரியில் மட்டும் பெரிய எழுத்துகளில், 'என்னை மறந்துவிட முயற்சி செய்... உன்னுடன் எப்போதும் என் ஆத்மா இருக்கும்'' என்று கூறப்பட்டிருந்தது. 

டெல்லியில் ரஜிந்தர்நகர் பகுதியில் வருண் வசித்தார். இருப்பிடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்தான் வருணுக்குத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க