வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/06/2018)

கடைசி தொடர்பு:22:30 (05/06/2018)

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி! ராமேஸ்வரம் கோயிலில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசியப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு படையினர்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி கடந்த 2013-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரின் ஆலோசனைபடி கோயிலின் 4 ரதவீதிகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் சுற்றுச் சுவர்களை ஒட்டியுள்ள கோயில் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களை அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கோயிலின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள், மெட்டர் டிடெக்டர் நுழைவு வாயில்கள் ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமநாதசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புகள் ஆய்வு செய்வதற்காகச் சென்னையிலிருந்து தேசியப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இன்று கோயிலுக்கு வந்திருந்தனர். தேசியப் பாதுகாப்புப் படையின் கமாண்டர் ஜெகநாதன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின்போது ஏற்கெனவே கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், தொடர்ந்து அவற்றை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.