வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (05/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/06/2018)

விபரீதமான குடும்பச் சண்டை! தந்தையைச் சுட்டுக்கொன்ற காவலர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனது துப்பாக்கியால் தந்தையைச் சுட்டுக்கொன்றார் ஆயுதப்படை காவலர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ்பிரபு

பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த, ஆயுதப்படை காவலர் விக்னேஷ்பிரபு. இவர் இன்று பாதுகாப்புப் பணிக்காகச் சென்றுவிட்டு தனது துப்பாக்கியுடன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், விக்னேஷ்பிரபுக்கும் அவரது தந்தை செல்வகுமாருக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தனது துப்பாக்கியை எடுத்த விக்னேஷ்பிரபு அதனை லோடு செய்து தனது தந்தையைச் சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவல் அறிந்து விரைந்த பெரியகுளம் தென்கரை போலீஸார் விக்னேஷ்பிரபவை கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. சமீப காலமாக ஆயுதப்படை காவலர்கள் தங்களது வேலை பளு காரணமாகத் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வரும் சூழலில், இன்று வடுகபட்டியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.