வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (05/06/2018)

கடைசி தொடர்பு:19:31 (05/06/2018)

எடப்பாடி லேட்டு... ராமநாதபுரம் செம ஸ்பீடு... தமிழ்நாட்டில் ஒரு பிளாஸ்டிக் இல்லா தீவு!

``2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.''- இப்படி ஒரு அறிக்கையைச் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்தவர்கள் ஏராளம்.

எடப்பாடி லேட்டு... ராமநாதபுரம் செம ஸ்பீடு... தமிழ்நாட்டில் ஒரு பிளாஸ்டிக் இல்லா தீவு!

``2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.''- இப்படியோர் அறிக்கையைச் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தவர்கள் ஏராளம். ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே முற்றிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட ஒரு ஊர் இருக்கிறது தெரியுமா? ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் தீவுதான் அது. பாம்பனில் ஆரம்பித்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை ராமேஸ்வரம் நகராட்சியை உள்ளடக்கிய பாம்பன் தீவில்தான் 2009-லிருந்து அப்போதைய கலெக்டர் ஹரிஹரனால் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

பிளாஸ்டிக்

இதுபற்றி ராமேஸ்வரம் தாலுகா மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

``ராமேஸ்வரம் தீவைச் சுற்றிலும் இருக்கும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இந்தப் பவளைப்பாறைகள் பல அரியவகை உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கக்கூடியவை. இப்படிப்பட்ட பாக்-ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பிரதேசத்தைப் பாதுகாக்க 2009-ல் கலெக்டராக இருந்த ஹரிஹரன் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த கடுமையான தடைகளை விதித்தார். கலெக்டர் ஹரிஹரனுக்கு முன்பே விஜயகுமார் என்ற கலெக்டரால் தீவின் நலன் கருதி பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கடுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால், ஹரிஹரன் தடை விதித்ததோடு, பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்றுப்பொருள்களையும் கொண்டு வந்தார்.

வியாபாரிகளிடம் பேசி கடைகளின் மூலம் மக்கள் புழக்கத்துக்கு அவற்றைக் கொண்டு வந்தார். 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை விலை ஆகும் மலிவு விலைத் துணிப்பைகளை தீவு முழுவதும் இருக்கும் கடைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தார். தொடர்ச்சியான ரெய்டுகள் மூலம் ரகசியமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர்மீது கடுமையான அபராதம் விதிப்பதும், ரோட்டில் கிடக்கும் அச்சடித்த பிளாஸ்டிக் பைகளுக்குச் சொந்தமான கடைகளின் உரிமையை ரத்து செய்வதும் என அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு இருந்தாலும் ராமேஸ்வரம் மக்கள் தூக்குச்சட்டி மற்றும் மஞ்சள் பைக்கு மாற்றாக மலிவு விலை துணிப்பைகளை பயன்படுத்த பழகிக்கொண்டனர். 

பிளாஸ்டிக்

மாவட்ட அரசிதழில் ஆணையாகவே இது வெளியிடப்பட்டது. பல விழிப்பு உணர்வு முகாம்களை நடத்தி ராமேஸ்வரம் முற்றிலும் பிளாஸ்டிக்குக்குத் தடை செய்யப்பட்ட பகுதி என மீடியாக்கள் மூலம் செய்தியும் வரவழைத்தார். அவர் மாற்றலாகிப் போனாலும் இன்றும் ராமேஸ்வரம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை கப்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், புனிதத் தலமான ராமேஸ்வரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் தீவு முழுவதும் அதிரடி ரெய்டுகள் அவ்வப்போது நடத்தி கட்டுப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும், சுற்றுலாப்பயணிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. முதல்வர் ராமேஸ்வரத்தை முன்மாதிரியாகக் கொண்டே இதற்கான மாற்றை  யோசிக்கலாம். கடுமையான சட்டங்கள் மூலமும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தாத வண்ணம் நிறைய விழிப்பு உணர்வையும் அரசு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார். 

ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், `` ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் இருக்கும் சந்தைக்கடைகள், உணவு மற்றும் தேநீர் விடுதிகள், மதுபான விடுதிகள், போன்றவற்றில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கிறோம். இதன்மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே இல்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் கொண்டு வராமல் தடுக்க பேருந்து மற்றும் ரயில்களில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஏற்கெனவே முன்மாதிரியான எங்கள் நகராட்சி இந்த அறிவிப்பால் மேலும் தூய்மையாகும். வெளியூரிலிருந்து ராமேஸ்வரம் வருபவர்கள் இனி அரசின் கட்டுப்பாட்டால் தீவினை அழகாக்க உதவுவார்கள். சுற்றுச்சூழல் சீர்கேடில்லாமல் 100 சதவிகிதம் தூய்மை நகராட்சியாக ராமேஸ்வரம் மாறும்!" என்றார்.  . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்