`கர்நாடகாவில் காலாவை வெளியிடாமல் இருப்பதே நல்லது!' - குமாரசாமி கருத்து!

காலாவை வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தயாரிப்பளார் எதிர்கொள்ள வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 

குமாரசாமி

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. காவிரி விவகாரத்துக்காகத் தமிழகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக ரஜினிக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பு அவர் நடித்துள்ள காலா படத்தில் எதிரொலித்து. கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி காலா படத்தை வெளியிட கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தடையை எதிர்த்து காலா படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது. எனினும் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து தற்போது கருத்து கூறியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``காலா படத்தை வெளியிட பிறப்பிக்க உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. கர்நாடக முதல்வர் என்ற முறையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, இந்த சூழ்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம். இது தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்லதல்ல. அதை மீறி வெளியிட்டால் அதன் விளைவுகளைத் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!