வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (05/06/2018)

கடைசி தொடர்பு:19:37 (05/06/2018)

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்! - நக்மாவுக்கு புதிய பொறுப்பு

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பதவியிலிருந்த நக்மா நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நக்மா

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நக்மா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸின் பொறுப்பாளராகவும் செயல்பட்டுவந்தார். இந்நிலையில் 2015-லிருந்து தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த நக்மா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராகப் பாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் எனக் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. 

மகளிர் காங்கிரஸில் பல்வேறு கோஷ்டி மோதல்கள், கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன. இது குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நக்மா மகளிர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் `இந்தப் பதவி நீக்க நடவடிக்கை வழக்கமாக நடைபெறும் செயல்முறை’ என்று காங்கிரஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.