கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றிய வழக்கறிஞருக்கு ரூ.50 லட்சம் அபராதம்!

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டதட்ட இரண்டு கோடி ரூபாயை ஏமாற்றிப் பறித்திருக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசன்.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றிய வழக்கறிஞருக்கு ரூ.50 லட்சம் அபராதம்!

கும்பகோணம்

ந்த 94  பிஞ்சு உயிர்களைக் குடித்த கொடூரமான கும்பகோணம் பள்ளி தீவிபத்துச் சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. சட்டத்தை மீறிக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம், எதிர்பாராத விபத்து நேரும்போது, தப்பிக்கக்கூட இடம் இல்லாத பள்ளி, படிக்க வந்த அந்தக் குழந்தைகளை சாம்பலாக்கிய தீ.. என அந்த விபத்தின் கருகிய சுவடுகள் அக்குழந்தைகளின் பெற்றோர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் காலத்துக்கும் ஒட்டிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்தக் காயங்களே ஆறாதவர்களுக்கு மேலும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் கொடுத்திருக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசன்.

கும்பகோணம்

 2004 ம் ஆண்டு நடந்த இந்தத் தீவிபத்தில், தங்கள் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழரசன் என்பவர், அவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய நஷ்ட ஈடு பணமான இரண்டு கோடி ரூபாயை, ஏமாற்றியும், மிரட்டியும் பறித்துள்ளார். இதை எதிர்த்துப் போடப்பட்ட மனுவைத் திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மூன்று வாரத்துக்குள் ஐம்பது லட்ச ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும், இந்த வழக்கு தொடர்பாக தமிழரசன்மீது மனு அளித்தால், அவர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்கப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!